ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? பா.ஜ., தலைவர் முருகன் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? பா.ஜ., தலைவர் முருகன் கேள்வி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (65)
Share
DMk, BJP, Stalin, Murugan, திமுக, பாஜ, ஸ்டாலின், முருகன்

சென்னை : ''கருப்பர் கூட்டத்துக்கு பின்புலமாக தாங்கள் இல்லை என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்தார்.

மாற்றுகட்சியினர் பா.ஜ.வில் இணைந்த நிகழ்வில் வெற்றிவேல் முருகா' என்ற அலைபேசி காலர் டியூன்' வெளியிடப்பட்டது.பின் முருகன் அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சமூக நீதி குறித்து பேசுகிறார். அவர் கட்சி எம்.பி.க்கள் தலைமை செயலரை சந்தித்துவிட்டு 'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா' என கேட்டனர். அவரது கட்சி நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக உயர்ந்ததை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். இவைகள் குறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

சமூக நீதி குறித்து பேச தி.மு.க.விற்கு எவ்வித அருகதையும் கிடையாது.தமிழர்கள் வீடுகளில் தினமும் காலையில் ஒலிப்பது கந்த சஷ்டி கவசம்.அதை கருப்பர் கூட்டம் ஆபாசமாக பேசியது. நடிகர்கள் சரத்குமார், ரஜினி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவிக்க தயங்கின.ஸ்டாலின் இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

கருப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்க வேண்டும். கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும். வீடியோ வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு பின்புலமாக இருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X