இந்தியா

ஸ்ரீ அரவிந்தர் மேனிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் மேனிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 18வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.இப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் 57 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி நர்மதா 563 மதிப்பெண் பெற்று முதலிடம், சக்தி 526 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், ஆசிகா பர்வீன் 521 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்றனர். மாணவர் திருமாவளவன் கணினி அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். தேர்வு எழுதியவர்களில் 17 மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 34 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவர்களை, பள்ளி சேர்மன் காசிலிங்கம், பள்ளி நிர்வாகியும், முதல்வருமாகிய அரவிந்தகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வி, தேர்ச்சி விகிதத்தை கடந்த 27ஆண்டுகளாக அளித்து வருகிறோம். பள்ளியில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு இலவச கல்வி வழங்கி வருகிறோம் என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X