மாவட்டத்தில் பரவலாக மழை; குண்டடத்தில் அதிக பொழிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் பரவலாக மழை; குண்டடத்தில் அதிக பொழிவு

Added : ஜூலை 23, 2020
Share
 மாவட்டத்தில் பரவலாக மழை; குண்டடத்தில் அதிக பொழிவு

திருப்பூர்:தென்மேற்கு பருவமழை களைகட்டியுள்ள நிலையில், குண்டடத்தில் நேற்று, 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.திருப்பூர் மாவட்டம் முழுவதும், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மழை குறைவாக பெய்யும் ஊத்துக்குளி, குண்டடம் பகுதிககளிலும் இந்தாண்டு மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று முன்தினம், மாவட்டத்தில், 30.30 மி.மீ.., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. நேற்றும், 16.86 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. குண்டடத்தில், 60 மி.மீ., -திருப்பூர் வடக்கில், 43 மி.மீ., - திருப்பூர் தெற்கில், 40 மி.மீ., - ஊத்துக்குளியில், 15 மி.மீ., - பல்லடத்தில், 14 மி.மீ.,அவிநாசியில் 3மி.மீ., - தாராபுரத்தில், 6 மி.மீ. - உடுமலையில், 9.20 மி.மீ., - மடத்தக்குளத்தில், 8 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தென்மேற்கு பருவத்தில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும், வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சரிந்து விழுந்த மரங்கள்திருப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாராபுரம் ரோடு பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. செட்டிபாளையம் பகுதியில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த நான்கு மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தது.அதேபோல் ராம்சந்திரா மிஷன் செல்லும் வழியில், நெடுஞ்சாலை துறை அமைத்துள்ள சாலையோர பூங்காவில் இருந்த இரு மரங்களும் முறிந்து கீழே விழுந்தது. மரங்கள் முறிந்து விழுந்த இடங்களில், அதிர்ஷ்டவசமாக யாரும் நடமாடவில்லை. இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X