சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் அர்ச்சகருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசியில், கோவில் அர்ச்சகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், 42 வயது அர்ச்சகருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரோடு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு தனது உறவினர் வீட்டுக்கு சமீபத்தில் சென்று வந்துள்ளார். இதனால், அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தினர், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் அனைவருக்கும், தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. கோவில் வளாகம் மற்றும் தொற்று பாதித்த இடங்களில், பேரூராட்சி நிர்வாகத்தினர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X