இந்தியா

திருமண மண்டபங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'திருமண மண்டபங்கள் 50 சதவீதம் பேர் பங்கேற்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் 'என முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் இசைக்கலைவன், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், லுார்து கயான் மார்சல், செயலாளர் மோகனசுந்தரம், துணை செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மண்ணாங்கட்டி ஆகியோர், முதல்வர் நாராயணசாமி மற்றும் கலெக்டர் அருண் ஆகியோரை சந்தித்து, மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருமண மண்டபத்தை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நாதஸ்வர கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், மேடை அலங்காரம் செய்பவர்கள், பூ அலங்காரம் செய்பவர்கள், இசை கச்சேரி குழுவினர், புரோகிதர்கள், மின் விளக்கு பந்தல் அமைப்பவர்கள் என பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமண மண்டபங்கள் வழக்கம்போல் செயல்பட, 50 சதவீத நபர்கள் பங்கேற்புடன் திருமண விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X