பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளூர் திட்ட குழும அலுவலகம் திறப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைத்து, திருப்பூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது. மாநகராட்சியின், குமரன் வணிக வளாகத்தில், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு ஊராட்சி எல்லைகளை கொண்ட, உள்ளூர் திட்டக்குழுமம். பல்லடம் ரோடு, கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது, உள்ளூர் திட்டக்குழும அலுவலகம், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், நில உபயோகம், வீட்டுமனை பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி பெற, இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நகர் ஊரமைப்பு மண்டல உதவி இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''மாவட்ட அளவிலான, நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகமும், உள்ளூர் திட்டக்குழும அலுவலகமும் இனி, இணைந்தே செயல்படும். மாவட்ட மக்கள், ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X