இந்தியா

மாநில திட்டக்குழுவை கலைத்தது ஏன்?

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'புதுச்சேரி மாநில திட்டக்குழு கலைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என முன்னாள் எம்.பி., ராமதாஸ் கூறி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் மாநில திட்டக்குழு இல்லை என முதல்வர் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால், முதல்வர் மாநில நலனுக்கு எதிராக பெரிய தவறை செய்துள்ளார். இக்குழு, மாநிலத்திற்கான திட்டங்களை வகுத்து, புதுச்சேரியின் ஆண்டுத் திட்டம் மற்றும் பட்ஜெட் தயார் செய்து ஒப்புதல் அளித்தபின் தான் வரைவு பட்ஜெட், மத்திய உள்துறை மற்றும் நிதித் துறைக்கு அனுப்பப்படுகிறது.கவர்னர் இக்குழுவின் தலைவராகவும், முதல்வர் துணை தலைவராகவும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைச் செயலர், அனைத்து அரசு செயலர்கள் மற்றும் நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.மிகவும் அத்தியாவசியமான இக்குழுவை கலைப்பதற்கான அவசியம் என்ன. மத்திய அரசு திட்டக் குழுவை கலைத்து விட்டால் புதுச்சேரியிலும் அக்குழுவை கலைக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா.மற்ற மாநிலங்களில் திட்டக்குழு செயல்பாட்டில் உள்ளபோது, புதுச்சேரியில் மட்டும் ஏன் கலைக்கப்பட்டது. அரசு இணையதளத்தில் இக்குழு கலைக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை. பட்ஜெட்டுக்கு திட்டக்குழு ஒப்புதலைப் பெறுங்கள் என்று கவர்னர் கூறியதால், குழு கலைக்கப்பட்டது என்றால் கவர்னருக்கு தெரியாமல் எப்படி கலைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.திட்டக்குழு கலைப்பு என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. புதிதாக அமைப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும், இருக்கும் நல்ல அமைப்புகளை அழித்துவிட்டு ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X