இந்தியா

போலி முகவரி கொடுத்து தொற்றுடன் தப்பிய நபர்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; போலி முகவரி கொடுத்து கொரோனா தொற்றுடன் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 21ம் தேதி மதியம் 12.00 மணிக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது பரிசோதனைக்கு வந்த ஒருவர், தனது பெயர் பாஸ்கர், 40, என்றும் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் வசிப்பதாக முகவரி மற்றும் தனது மொபைல் எண்ணை பதிவு செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வர, அவர் கொடுத்திருந்த முகவரிக்கு சென்றனர். ஆனால், முகவரி போலி என தெரியவந்தது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு வசித்த பாஸ்கர் என்ற நபர் வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து உழவர்கரை தாசில்தார் குமரன் கொடுத்த புகாரின்பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X