பொது செய்தி

தமிழ்நாடு

'மாரி வனத்தில்' மரக்கன்று கோவில் நிலத்தில் ஏற்பாடு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 'மாரி வனத்தில்' மரக்கன்று கோவில் நிலத்தில் ஏற்பாடு

அவிநாசி:அவிநாசி அருகே, தெக்கலுாரில் 'மாரி வனம்' என்ற பெயரில், மரக்கன்றுகள் நடப்பட்டன.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட சேற்று மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 2,500 மரக்கன்று, மியாவாகி முறையில் நடப்பட்டன.'கோவில் நிலத்தை பசுமை போர்வையாக மாற்றும் நோக்கில் மரக்கன்று நடப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன், துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், அவிநாசி பி.டி.ஓ.,க்கள் மனோகரன், ஹரிஹரன், அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன், ஊராட்சி தலைவர் மரகதமணி, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X