இந்தியா

முன் விரோதத்தில் மீனவர் கடத்தல் வாகன தணிக்கையில் சிக்கிய கும்பல்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

பாகூர்; படகு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடத்தி செல்லப்பட்ட மீனவரை, போலீசார் மீட்டனர்.புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 48; மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகு, மீன்பிடி வலைகளை கடந்த மார்ச் மாதம் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பான வழக்கு, விசாரணையில் உள்ளது.இச்சம்பவம் தொடர்பாக, முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பிரகாஷை, சிலர் கடத்தி சென்றதாக தகவல் பரவியது.தகவலறிந்த கிருமாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிரகாஷை, முருகன் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் படகில் கடத்தி, சிதம்பரம் அருகே கொண்டு சென்றது தெரியவந்தது.கிருமாம்பாக்கம் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அந்த கும்பல், அங்கிருந்து காரில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. கிள்ளை போலீசார் நடத்திய வாகன சோதனையில், அந்த கும்பல் சிக்கிக் கொண்டது. இதையறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், கிள்ளைக்கு சென்று பிரகாஷை மீட்டனர்.இது தொடர்பாக, முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X