சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஏசி' பயன்படுத்திய ஓட்டலுக்கு 'பைன்'

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பரவல் எச்சரிக்கை மீறி 'ஏசி' பயன்படுத்திய ஓட்டலுக்கு பறக்கும் படையினர் அபராதம் விதித்தனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது குறித்து, இந்த பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.மூன்றாவது மண்டல பறக்கும் படை அலுவலர் துணை தாசில்தார் அருள்ராஜ் தலைமையில் நேற்று கண்காணிப்பு நடந்தது. இதில், கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு நடத்தியதில், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், தடையை மீறி 'ஏசி' பயன்படுத்தியதும் தெரிந்தது. இதனால், அந்த ஓட்டலுக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X