கொரோனா சிகிச்சை: 17 நபர்கள் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை: 17 நபர்கள் அனுமதி

Added : ஜூலை 23, 2020
Share

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா சிகிச்சைக்காக, 17 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம், கொரோனா சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று, கொரோனா உறுதி செய்யப்பட்ட, 17 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஏற்கனவே, 171 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, கொரோனா சிகிச்சை வார்டில், 168 நபர்கள் உள்ளனர். பி.சி.ஆர்., பரிசோதனை மையத்தில், 82 நபர்கள், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று சந்தேகத்தில், தனிமைப்படுத்தப்பட்டு வார்டில், 21 பேர் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X