'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள்: நியூஸ்கீம் ரோட்டில் மக்கள் திணறல்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள்: நியூஸ்கீம் ரோட்டில் மக்கள் திணறல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் - பல்லடம் ரோட்டினை இணைக்கும் நியூஸ்கீம் ரோடு, உடுமலை, திருப்பூர், பழநிக்கும்; கிராமங்களுக்கும் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.இந்நிலையில், நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள், ரோட்டில், 'பார்க்கிங்' செய்து செல்கின்றனர்.'நோ பார்க்கிங்' பகுதியில், விதிமுறைகளை மீறி தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொமக்கள் கூறுகையில், 'மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகளவு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த நியூஸ்கீம் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. வாகனங்கள் தாறுமாறாகவும்; விதிமுறை மீறியும் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏற்கனவே, ரோடு மோசமாக உள்ள சூழலில், வாகனங்களும் விதிமுறை மீறி நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X