பொது செய்தி

தமிழ்நாடு

துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை துவக்கம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை துணை தபால் நிலையங்களில் ஆதார் சேவை மைய செயல்பாடு மீண்டும் துவங்கியுள்ளது.உடுமலை தலைமை தபால் நிலையத்தில், கடந்தாண்டு முதல், ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. ஆனால், சுற்றுப்பகுதி துணை அஞ்சலகங்களில், ஜன., மாதம் துவக்கப்பட்டு தொழில்நுட்ப சிக்கலால், செயல்பாட்டில் தடை ஏற்பட்டிருந்தது.பின்னர், கொரோனா பாதிப்புகளால், அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை மைய செயல்பாடு நிறுத்தப்பட்டது.தற்போது, தபால் துறையின் உத்தரவுபடி, துணை தபால் நிலையங்களிலும், ஆதார் சேவை மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், தலைமை தபால் நிலையம் உட்பட, காந்திநகர், குடிமங்கலம், கணியூர், கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், மலையாண்டிபட்டிணம், பெதப்பம்பட்டி, பூலாங்கிணர், புங்கமுத்துார், வெங்கடேசா மில்ஸ், உள்ளிட்ட துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.புதிய ஆதார் பதிவுகளுக்கு கட்டணம் இல்லை. புகைப்பட மாற்றம், கைரேகை, கண் கருவிழி புதுப்பித்தல், பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல்எண் பதிவு, இ-மெயில் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் உரிய கட்டணத்துடன் செய்துதரப்படுகிறது.'மக்கள், துணை அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்,' என தபால் அலுவலர் சிவராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X