பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில், 2,750 மரக்கன்று நடவு: பொன்னிவாடியில் பசுமை ஆட்சி

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 ஒரே நாளில், 2,750 மரக்கன்று நடவு: பொன்னிவாடியில் பசுமை ஆட்சி

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், பொன்னிவாடி கிராமத்தில் நேற்று, 2,750 மரக்கன்றுகள் நடப்பட்டன.தாராபுரம் தாலுகா, பொன்னிவாடி கிராமப்புற விவசாயிகளும், இளைஞர்களும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நடவு செய்ய, ஆர்வம் செலுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களில், செம்மரம், நாட்டுப்பலா உள்ளிட்ட மரவகைகள் நடவு செய்ய, அதிக விருப்பம் தெரிவித்துள்ளனர்.பொன்னிவாடியில் உள்ள, வி.ஏ.ஓ., மகேஷ் பிரபுக்கு சொந்தமான, முதலியார் தோட்டத்தில் நேற்று, மரக்கன்று நடும் விழா நடந்தது. ஆறாவது திட்டத்தின், 13வது நிகழ்ச்சியில், 2,750 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுப்ரமணியன், பத்மாவதி, மகேஷ்பிரபு, ராஜேஸ்வரி, ஆதவ் இனியன், ஆதன்யா, வீரமணி, விழுதுகள் அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் அனிதா சேகர் உள்ளிட்டோர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.மொத்தம், 15.50 ஏக்கரில், மனோரஞ்சிம் மற்றும் செம்மரம் - 2000, நாட்டுப்பலா - 40, தேக்கு - 100, புங்கன் - 100, மலைவேம்பு -50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்துடன், 300 அடி நீளம், அறு அடி அகலத்தில், 450 மரக்கன்றுகள், 'மியாவாகி' முறையில் நடப்பட்டன.இத்திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X