பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் நடத்த இயலாது: தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, செப்டம்பர், 7 வரை, தேர்தல் நடத்த இயலாது' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சென்னை, திருவொற்றியூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.சாமி, பிப்., 27ம் தேதியும், குடியாத்தம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., காத்தவராயன், பிப்., 28ம் தேதியும், உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., --
by election, election commission, ECI, இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம், கைவிரிப்பு

சென்னை : 'தமிழகத்தில், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, செப்டம்பர், 7 வரை, தேர்தல் நடத்த இயலாது' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவொற்றியூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.சாமி, பிப்., 27ம் தேதியும், குடியாத்தம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., காத்தவராயன், பிப்., 28ம் தேதியும், உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., -- எம்.எல்.ஏ., அன்பழகன், கொரோனா காரணமாக, ஜூன், 10ம் தேதி இறந்தார். இதன் காரணமாக, மூன்று சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

ஒரு சட்டசபை தொகுதி காலியானால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருவொற்றியூர் தொகுதிக்கு, ஆக., 26க்குள்ளும், குடியாத்தம் தொகுதிக்கு, ஆக., 27க்குள்ளும், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடு முழுவதும், ஒரு லோக்சபா தொகுதியும், 56 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. இவற்றில், தமிழகத்தில் இரண்டு உட்பட, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும், செப்டம்பர், 7க்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடத்துவது, பொது மக்கள் உடல் நலத்திற்கு பாதுகாப்பானதாக அமையாது.சில மாநிலங்களில், அதிகப்படியான மழை, வெள்ளம் போன்றவற்றால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, செப்டம்பர், 7 வரை, இடைத்தேர்தல் நடத்த இயலாது. அதன்பின், சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ம.பி.,யில் 22 தொகுதிகள் காலி!


கொரோனா வைரஸ் பரவல் மற்றும் சில மாநிலங்களில், மழை வெள்ளம் போன்ற காரணங்களால், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்., 7க்குள் நடத்த திட்டமிட்டிருந்த, அனைத்து இடைத்தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரசில் இருந்து விலகிய, முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, மத்திய பிரதேச சட்டசபையின், 22, காங்., - எம்.எல்.ஏ.,க்களும் பதவி விலகினர். இந்த இடங்களுக்கு, செப்டம்பர், 10க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இதைத் தவிர, அசாம், கேரளா, நாகாலாந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில், காலியாக உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
24-ஜூலை-202016:06:31 IST Report Abuse
sivam 2000, 5000 எல்லாம் இப்போ கிடைக்காது,தேர்தல்ல நிக்கறதுக்கு ஆள் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202012:33:25 IST Report Abuse
Lion Drsekar சாமி நீ நலல இருக்கனும், இடையே அல்லது உடையோ எந்த தேர்தல் வந்தாலும் எந்த பயனும் மக்களுக்கு இல்லை, ஆகவே இந்த தேர்தல் என்பது எட்டிமரம், இந்த தேர்தல் நடத்தாமல் இருந்தால் மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடி மிச்சம், வாழ்க தேர்தல் ஆணையம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202011:10:56 IST Report Abuse
Chandramoulli வருத்தப்பட வேண்டியது தமிழக உருப்படாத தொலைக்காட்சி நிறுவனங்கள், பிரேக்கிங் நியூஸ் போடமுடியாது . விளம்பர வருமானம் இருக்காது. நல்ல செயல் செய்த தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X