பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
kerala, coronavirus, covid 19, kerala news, கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,110 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக தொற்று 5 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 104 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 115 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் 22,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொதுமுடக்கம் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று கோழிக்கோடு, எர்ணாகுளம், பரசல்லா, கொல்லம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 9,458 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 1.58 லட்சம் பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


latest tamil news



இன்று அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 222 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 106 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 100 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 89 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 83 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 80 பேருக்கும் தொற்று ஏற்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
24-ஜூலை-202008:39:17 IST Report Abuse
Balasubramanian Ramanathan எங்க கருத்தில் மாற்றம் இல்லை.கேரளா சிறப்பாக செயல் படுகிறது. இப்படிக்கு மைய்ய நாயகனின் விழுதுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X