சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தாக்குதலில் இறந்தவர் தாயிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

துாத்துக்குடி : சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால், இறந்ததாக கூறப்படும் மற்றொரு வாலிபரின் தாயிடம், நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்துள்ள வெங்கடேஸ்வரபுரத்தில், கடந்த மே மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக, சாத்தான்குளம் போலீசார் விசாரித்தனர். வழக்கில் தொடர்பில்லாத மகேந்திரன், ௨௮, என்பவரை, எஸ்.ஐ., ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசார், மே 23ல், விசாரணைக்கு அழைத்துச் சென்று, தாக்கி விடுவித்தனர்.உடல்நலம் பாதிக்கப்பட்ட மகேந்திரன், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில், ஜூன், 13ல் இறந்தார். இது தொடர்பாக, மகேந்திரன் தாய் வடிவு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி, துாத்துக்குடியில் உள்ள மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி வீட்டில், நேற்று முன்தினம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 3:30 மணிக்கு, டி.எஸ்.பி., அனில்குமார், இன்ஸ்பெக்டர் சபீதா ஆகியோர், சந்தனமாரி வீட்டில், அவரது தாய் வடிவிடம் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, வடிவுக்கு இரண்டு பெண் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் இறப்பு குறித்து விசாரிக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று மாலை, துாத்துக்குடி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் வந்து, ஆலோசனை நடத்தி சென்றனர். ஜாமின் மனு தள்ளுபடிஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் உள்ள போலீஸ்காரர் முருகன், ஜாமின் கேட்டு, மதுரை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி தாண்டவன், நேற்று காணொலியில் விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை துவக்க நிலையில் உள்ளது. கைதாகி, 20 நாட்களாகின்றன. மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது.'ஜாமின் அனுமதித்தால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அது விசாரணையை பாதிக்கும்' என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.இதற்கிடையில், இந்த வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள, முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு நேற்று, மதுரை அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X