பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவக்கம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Covaxin, Corona Vaccine, Covid19, TN, TamilNadu, கோவாக்சின், தடுப்பு மருந்து, கொரோனா, தமிழகம்

சென்னை : கொரோனா தொற்று தடுப்புக்கான, 'கோவாக்சின்' மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி, சோதனை செய்யும் பணி, தமிழகத்தில், நேற்று, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில் துவங்கியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதரபாத்தில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும், 'கோவாக்சின்' மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருந்து, ஆக., 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறுதிகட்ட பரிசோதனை நடத்த, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடாக, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, மருத்துவ கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரிக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. அதன்படி, தடுப்பு மருந்தை பரிசோதிப்பதற்காக, தகுதியான தன்னார்வலர்களை கண்றியப்பட்டனர். அவர்களுக்கு, உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தும் பணி, நேற்று துவங்கியுள்ளது.

இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை துணைவேந்தர், ரவிக்குமார் அளித்த பேட்டி:இந்தியாவில், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை உட்பட, 12 மருத்துவ மையங்களில், கோவாக்சின் மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி, பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவாக்சின் தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தும் பணி துவங்கி உள்ளது.

தன்னார்வலர்கள், தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருகின்றனர்.அவர்களுக்கு மருந்து செலுத்தப்பட்ட பின், ஆறு மாதம் வரை கண்காணிக்கப்படுவர். 18 வயதில் இருந்து, 55 வயதிற்கு உட்பட்ட தன்னார்வலர்கள், எந்த நோயும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மருந்து செலுத்திய மூன்று மாதங்களில், அதன் பயன் தெரிய வரும். மேலும், தன்னார்வலர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசியை சோதனை செய்ய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருத்துவமனையில், 50 முதல், 100 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளலாம்.இ வ்வாறு, அவர் கூறினார்.


பரிசோதனை எப்படி?


மருத்துவமனையின், மருந்தியல் துறை டாக்டர், சத்யஜித் கூறியதாவது:முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், இரண்டாவது ஊசி, 14 நாளில் செலுத்தப்படும். அப்போது, தன்னார்வலர்கள் சில மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். மற்றபடி, அவர்கள் தங்களது அன்றாட பணிகளை தொடரலாம்.

மேலும், 28, 42, 104, 194 ஆகிய நாட்களில், தன்னார்வலர்கள் ரத்த மாதிரிகள் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அந்த ரத்த மாதிரிகளில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது பரிசோதனை நடத்தப்படும்.தன்னார்வலர்கள் ஒருமுறை மருத்துவமனைக்கு வந்து செல்ல, 1,000 ரூபாயை, பாரத் பயோடெக் நிறுவனம் கொடுக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202021:43:50 IST Report Abuse
Girija சேராத இடம் தனிலே சேர வேண்டாம் ,
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
24-ஜூலை-202012:31:14 IST Report Abuse
Tamilnesan சோதனை தாமதம் ஏன் ? ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தடூப்பூசி கிடைக்குமா ?
Rate this:
Cancel
24-ஜூலை-202007:18:54 IST Report Abuse
ஆரூர் ரங் தடுப்பு மருந்தை ஒன்றிணைவோம் வா வில் பங்குபெற்றவர்களுக்குப் போட்டு சோதியுங்க . அவ்வளவும் கிருமி
Rate this:
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202021:22:55 IST Report Abuse
Unmai Vilambiandha kirumigalai alipadhu ungal kayyil dhaan ulladhu: 2021 il yosithu vaakariyungal Corona kooda konjam irakkam kaatum - aanaal karunaa kumbal ondrum paarkaadhu naam dhaan alikka vendum...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X