போலீஸ் ஸ்டேஷன் முன் வாலிபர் குத்தி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் முன் வாலிபர் குத்தி கொலை

Added : ஜூலை 24, 2020
Share
திருச்சி : சமயபுரம் கோவில் அருகே, கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீஸ் ஸ்டேஷன் முன், வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே, மாகாளிக்குடியை சேர்ந்த தங்கமணி என்பவர், தேங்காய், பழம் கடை வைத்துள்ளார். ஊரடங்கால் கடை மூடப்பட்டுள்ளது.அதே இடத்தில், விக்னேஷ், 23, என்பவர், தானும் தேங்காய், பழம் கடை வைக்க உள்ளதாக, தங்கமணியிடம் தகராறில்

திருச்சி : சமயபுரம் கோவில் அருகே, கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீஸ் ஸ்டேஷன் முன், வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே, மாகாளிக்குடியை சேர்ந்த தங்கமணி என்பவர், தேங்காய், பழம் கடை வைத்துள்ளார். ஊரடங்கால் கடை மூடப்பட்டுள்ளது.அதே இடத்தில், விக்னேஷ், 23, என்பவர், தானும் தேங்காய், பழம் கடை வைக்க உள்ளதாக, தங்கமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, தங்கமணியின் கடையை, விக்னேஷ் அடித்து சேதப்படுத்தினார். தங்கமணி, சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்று, போலீஸ் ஸ்டேஷன் முன் வழிமறித்த விக்னேஷ், மீண்டும் தகராறு செய்தார்.

தங்கமணி, தான் வைத்திருந்த கத்தியால், விக்னேஷை குத்தினார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், விக்னேஷ் உயிரிழந்தார். சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X