சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலை துண்டித்து தொழிலாளி பலி விசாரணையில் விலகியது மர்மம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : நண்பருடன் பைக்கில் சென்ற, கூலித் தொழிலாளி தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், விபத்தில் அவர் இறந்தது உறுதியானது.

விழுப்புரம் மாவட்டம், அருள்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்ஞானதேசன், 40; ஜான்சத்தியசீலன், 46; கூலித் தொழிலாளிகள். நேற்று முன்தினம், வளத்தி அருகே, வேலைக்கு சென்றவர்கள், மாலை, 5:00 மணிக்கு, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.பாப்பாந்தாங்கல் முருகன் கோவில் அருகே, பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற, பால்ஞானதேசன் தலை துண்டிக்கப்பட்ட உடல் மட்டும், ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தது. தலை, சாலை ஓரத்தில் உள்ள புதரில் கிடந்தது.

பைக்கை ஓட்டிச் சென்ற ஜான்சத்தியசீலன், படுகாயங்களுடன், வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விழுப்புரம், எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த பகுதியில், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாப்பாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், 30, நேற்று முன்தினம் மாலை, நெல் அறுவடை இயந்திர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த பைக், இயந்திர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பால்ஞானதேசன் கழுத்தில், அறுவடை இயந்திர பிளேடு வெட்டியதில், தலை துண்டிக்கப்பட்டு இறந்தார்.

வேலுாரில் சிகிச்சை பெற்று வரும் ஜான்சத்தியசீலனிடம் விசாரித்ததில், விபத்து நடந்ததை உறுதி செய்தார். பைக் ஓட்டிய ஜான்சத்தியசீலன், எதிரில் வாகனத்தை கண்டதும் தலையை கீழே சாய்த்ததால், பின்னால் அமர்ந்திருந்த பால்ஞானதேசனின் கழுத்தில், வாகனத்தின் பிளேடு வெட்டியதும் தெரிந்தது. வளத்தி போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X