சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காருக்குள் சிக்கிய 2 சிறுமியர் மூச்சு திணறி பரிதாப பலி

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 காருக்குள் சிக்கிய 2 சிறுமியர் மூச்சு திணறி பரிதாப பலி

திருக்கோவிலுார் : காருக்குள் சிக்கிய, இரண்டு சிறுமியர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலத்தை சேர்ந்த சிறுமியர், ராஜி, 7; வனிதா, 3. நேற்று, இவர்களது பெற்றோர், குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து வைத்து, கூலி வேலைக்குச் சென்றனர்.மாலையில் பெற்றோர் வந்தபோது, சாப்பாட்டை குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தது தெரிந்தது. சிறுமியரையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினர்.வீட்டின் அருகே, பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த ராஜா என்பவருக்கு சொந்தமான, 'மாருதி ஸ்விப்ட்' காருக்குள், சிறுமியர் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சிறுமியர் இருவரும் காரை திறந்து உள்ளே சென்று, கதவை மூடி, விளையாடியுள்ளனர்.கதவைத் திறக்கத் தெரியாமல், மூச்சு திணறி இறந்திருக்கலாம் என, தெரிகிறது. மணலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
26-ஜூலை-202023:54:28 IST Report Abuse
கதிரழகன், SSLC மூடின காருக்குள்ள பிராணவாயு போதுமான அளவு இருந்திருக்கலாம், ஆனா சூடு கண்டபடி எகிறும் வெயில் நேரத்துல. சாதாரணமா நூத்தி இருவது டிகிரி போவும், விட்டா நூத்தி முப்பது கூட போவலாம். அதுல தான் பாவம் சின்ன புள்ளைங்க செத்திருச்சுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X