சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' வீரர் வீட்டில் 20 சவரன் கொள்ளை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சிவகங்கை : முன்னாள் ராணுவ வீரர் வீட்டில், நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 20 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, மருதிபட்டயைச் சேர்ந்தவர், முன்னாள் ராணுவ வீரர் நாகசுந்தரம், 75. இவர், மனைவி, மகன், மருமகள், இரு பேத்திகள், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கினர். நள்ளிரவில் வீடு புகுந்த, ஏழு முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவு, 'ஹார்ட் டிஸ்க்'கை உடைத்து, கத்தியை காட்டி மிரட்டி, 20 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் மற்றும் அலைபேசிகளை கொள்ளையடித்து சென்றனர். எஸ்.பி., ரோஹித்நாதன் கூறுகையில், ''நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையில் இளம் வயதினர் ஈடுபட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் சிறையில் இருந்து வந்தவர்கள் குறித்து, விசாரிக்கிறோம்,'' என்றார். ஜூலை, 14ல், முடுக்கூரணி ராணுவ வீரர் ஸ்டீபன் ராஜுவின் தாய், மனைவியை கொன்று, 58 சவரன் கொள்ளை நடந்த நிலையில், தற்போது நடந்துள்ள கொள்ளை, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X