சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மீன் பிடித்த நடிகர்களுக்கு அபராதம்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 ஏரியில் மீன் பிடித்த நடிகர்களுக்கு அபராதம்

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியில், சட்டவிரோதமாக நுழைந்து, மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரிக்கு, வனத் துறையினர் அபராதம் விதித்தனர்.

கொரோனா ஊரடங்கால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணியர் வர, தடை உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் விமல், சூரி, அங்குள்ள, பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின.வனத் துறை விசாரணையில், ஜூலை, 17ல் அங்கு வந்த நடிகர்கள் விமல், சூரி மீன் பிடித்தது தெரிந்தது. இருவருக்கும் தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ரேஞ்சர் கிருஷ்ணசாமி கூறுகையில், ''பணியில் அலட்சியம் காட்டிய சூழல் காவலர்கள், மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர்,'' என்றார். விசாரணையில், நடிகர்கள், 'இ - பாஸ்' இன்றி வந்ததும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:42:24 IST Report Abuse
Bhaskaran கையில் கொஞ்சம் காசு இருந்தால் தலைகீழாக நடப்பார்கள் .வடிவேலுவின் கதை நினைவிருக்கட்டும் சூரி .உச்சத்தில் இருந்த அவர் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202005:11:43 IST Report Abuse
Girija உனக்கு ஊருக்கு உபதேச கொரோனா வீடியோ ஒரு கேடு ?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூலை-202004:19:15 IST Report Abuse
NicoleThomson இந்த நடிகர்கள் இனி இரண்டு வருடம் நடிக்கவும் தகுதியில்லாம செய்யவேண்டும் நீதித்துறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X