சித்தப்பா கொலை அண்ணன் மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தப்பா கொலை அண்ணன் மகன் கைது

Added : ஜூலை 24, 2020
Share

ரிஷிவந்தியம் : சொத்து தகராறில், சித்தப்பாவை கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம், அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, முகத்தில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். பகண்டை கூட்ரோடு போலீசார் விசாரணை நடத்தினர்.அது, வடமாமாந்துாரைச் சேர்ந்த இளைய ராமர், 73, என தெரிந்தது. சந்தேகத்தின் படி, இளைய ராமரின் அண்ணன் மகன் சங்கர், 49, என்பவரிடம் விசாரித்தனர்.விளை நிலம் பாகம் பிரிப்பதில், முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மதியம் இளைய ராமரை, சங்கர் பைக்கில், பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, சொத்து குறித்து பேசிய போது, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சங்கர், அருகில் கிடந்த குச்சியால், சித்தப்பாவின் முகத்தில் குத்தியதில், இறந்தது தெரிந்தது. சங்கரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X