பொது செய்தி

தமிழ்நாடு

வசதிகளின்றி தள்ளாடும் சமூக நலத்துறை: கம்ப்யூட்டர் இருந்தால் கவலையில்லை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

உடுமலை:சமூக நலத்துறை அலுவலகத்தில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.சமூக நலத்துறை அலுவலர்கள், மகளிருக்கான சிறப்பு திட்டங்கள், திருமண உதவித்தொகை, விதவை, ஆதரவற்ற பெண்களுக்கான திட்டங்களை ஒன்றிய அளவில் செயல்படுத்துகின்றனர்.இந்நிலையில், ஒன்றிய அலுவலகங்களில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், சமூக நலத்துறை அலுவலர்கள் திணறி வருகின்றனர்.திருமண உதவித்தொகை திட்டத்தில், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள், பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கோப்பு, பதிவேடுகள், பராமரிக்க அலுவலர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, கம்ப்யூட்டர் தேவையாக உள்ளது. ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் பொதுவான பயன்பாட்டுக்கென இருப்பதால் சிக்கல் நீடிக்கிறது. கம்ப்யூட்டர் வசதி செய்வதாக தெரிவித்து ஓராண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது, அலுவலர்களும் சுழற்சி முறையில், பணிக்கு வருவதால், கூடுதல் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளதால், கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்த வேண்டுமென அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X