பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் விருப்பம்! பால் கொள்முதலில் குழப்பமான உத்தரவு:கூட்டுறவு சங்கத்தினருக்கு நெருக்கடி நிலை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

உடுமலை:பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், பால் கொள்முதலை, 20 சதவீதம் குறைக்கவும், தேவைப்பட்டால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கலாம்,' என தெளிவில்லாமல், ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 520 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்கள் மூலம், ஆவின் நிறுவனம், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 2.55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பால் விற்பனை குறைவு, பால் பவுடர் அதிகளவு உள்ளிட்ட காரணங்களினால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் செய்வதை, 20 சதவீதம் குறைக்கவும், ஞாயிறு விடுமுறை அளிக்கவும், ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூட்டுறவு சங்கத்தினர் புகார் எழுப்பியுள்ளனர்.10 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதல் தொகையை ஆவின், கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வந்தது. ஆனால், கடந்த ஜூன், 20 முதல், ஒரு மாதமாக நிலுவை வைத்துள்ளதால், கூட்டுறவு சங்கங்களே, தங்கள் இருப்பு நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.இருப்பு நிதி இல்லாத சங்கங்கள், தொகை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் கூறியதாவது:தனியார் பால் நிறுவனங்கள், கொள்முதல், விலையை குறைத்துள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.ஆவின் நிறுவனமும், 20 சதவீதம் பால் குறைப்பு, ஞாயிறு கொள்முதல் செய்ய வேண்டாம், என அந்தந்த சங்க நிர்வாகிகள் மூலம், அறிவிப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்திலும், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளன.உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்யாமல், திருப்பி அனுப்புவது ஏற்புடையது அல்ல. கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிர்வாகம் உடனுக்குடன் பணம் வழங்காமல், இழுத்தடித்து வருகிறது. இருப்பு தொகை இல்லாத சங்கங்களில், பல வாரமாக விவசாயிகளுக்குரிய தொகை வழங்கப்படவில்லை.எனவே, விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து பாலையும் கொள்முதல் செய்யவும், கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக பணம் வழங்கவும், ஆவின் நிறுவனம் மூலம் கலப்பு தீவனத்திற்கான மானியத்தை தொடர்ந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பரமசிவம் தெரிவித்தார்.நீங்களே சொல்லிருங்க!திருப்பூர் ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கூறுகையில், 'ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் நிறுத்தவோ, ஞாயிற்றுக்கிழமை கொள்முதலை நிறுத்தவோ உத்தரவிடவில்லை; இது முற்றிலும் தவறான தகவல்.பால் விற்பனை மந்தமாக உள்ளதால், கூட்டுறவு சங்க அளவில் கொள்முதல் குறைக்கலாம்; விவசாயிகளே விரும்பினால், குறைத்துக்கொள்ளலாம்,' என கூட்டுறவு சங்க செயலாளர், தலைவர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X