பொது செய்தி

தமிழ்நாடு

பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பால்பண்ணை துவங்க ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, மத்திய அரசு, 33 சதவீத மானிய உதவியுடன், 7 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் கடன் வழங்குகிறது.விவசாயிகளின் முக்கிய உப தொழிலாக கறவை மாடு வளர்ப்பு உள்ளது. விவசாயிகள், பால்பண்ணையை முழுநேர தொழிலாக மாற்றினால், கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கால்நடை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை, கடந்த 2010ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தத் திட்டத்தின் கீழ், பால் பண்ணை துவங்குவோருக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இதற்கு, குறைந்தபட்சம், 10 மாடுகளுடன் பால் பண்ணை துவங்க வேண்டும். பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பால் பண்ணை துவங்க முன்வருவோருக்கு இந்த சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. நபார்டு வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.கடன் தொகையில், பொதுப்பிரிவினருக்கு, 25 சதவீதம் வரையும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு, 33 சதவீதமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.நபார்டு வங்கி தவிர, மற்ற வர்த்தக வங்கிகள், மண்டல வங்கிகள், மாநில- கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளிலும் இந்த திட்டத்தில் கடனுதவி பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற விரும்புவோர், தங்கள் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X