பொது செய்தி

தமிழ்நாடு

பொத்துக்கிட்டு ஊத்துது வானம் :அருவியில கொட்டுது தூவானம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 பொத்துக்கிட்டு ஊத்துது வானம் :அருவியில கொட்டுது தூவானம்

வால்பாறை:சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தீவிரமாக பெய்கிறது. இதனால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.இடைவிடாது பெய்யும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 401 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 80 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 109.38 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,175 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,229 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 16, வால்பாறை - 17, மேல்நீராறு - 5, கீழ்நீராறு - 5, காடம்பாறை - 7, மேல்ஆழியாறு - 20, ஆழியாறு - 4, பரம்பிக்குளம் - 32, துணக்கடவு - 47, நவமலை -7, பெருவாரிப்பள்ளம் - 48, சர்க்கார்பதி - 18, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X