நகராட்சி ஊழியருக்கு தொற்று: கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஊழியருக்கு தொற்று: கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்

Added : ஜூலை 24, 2020
Share
 நகராட்சி ஊழியருக்கு தொற்று: கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது.பொள்ளாச்சி நகராட்சியில் மின் கண்காணிப்பாளராக பணியாற்றும், 53 வயதானவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கடந்த, 21ம் தேதி பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.தொற்று உறுதியான தகவல் கிடைத்ததும், பொறியாளர் பிரிவு அலுவலர்களை, கீழ் தள பகுதிக்கு வர அறிவுறுத்தியதுடன், அப்பிரிவு மூடப்பட்டது. நகராட்சி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சியில் ஒருவருக்கு கொரோனா என தகவல் பரவியதால் மக்களும், அலுவலர்களும் பீதியடைந்துள்ளனர்.நகராட்சி அலுவலகத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் அலுவலகத்தை மூடி, இரண்டு நாட்களாவது கிருமிநாசினி தெளிக்க வேண்டும், என பொதுமக்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகராட்சியில், சேர்மன் வீதி, அழகப்பா லே - அவுட், ரத்தினவிநாயகர் கோவில் வீதி உள்ளிட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொற்று உறுதியானவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், ''நகராட்சி அலுவலகத்தில், பொறியாளர் பிரிவு மூடப்பட்டு கிருமிநாசினி நகராட்சி முழுவதும் தெளிக்கப்பட்டது. அந்த பிரிவில், தொற்று பாதித்தவருடன் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X