பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூலிகை பொடி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூலிகை பொடி

உடுமலை:உடுமலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கை மூலிகை பொடி வழங்கப்பட்டது.உடுமலை நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், 24 பேர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், 24 பேர், திருப்பூர், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, பெரியகோட்டை ஊராட்சி மாரியம்மன் நகரை சேர்ந்த, நகராட்சி தற்காலிக பணியாளரான, 20 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், உடுமலை நகராட்சியில், நேரு வீதி, கங்காதரன் லே அவுட், திரு.வி.க.,சந்து, எஸ்.என்.ஆர்., நகர், விசாலாட்சி சுந்தரம் லே அவுட், கே.பி.,கோவில் வீதி ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், நகராட்சி சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை இயற்கை வாழ்வியல் மையம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கை மூலிகை பொடி, கபசுர பொடி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், நோய் தொற்று பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X