கோடிகள் புரளும் திட்டத்தில் முறைகேடு! கை நனைக்கும் நகராட்சி அதிகாரிகள் 'கப்சிப்'

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கோடிகள் புரளும் திட்டத்தில் முறைகேடு! கை நனைக்கும் நகராட்சி அதிகாரிகள் 'கப்சிப்'

வால்பாறை:வால்பாறையில் திறந்தவெளியில் வீசப்படும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ள நிலையில், திட்டத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய நெருக்கடி நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடக்கிறது. வால்பாறை நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில் காலை நேரத்தில் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கின்றனர்.இதனையடுத்து, வால்பாறை நகரில் நகராட்சி சார்பில் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.திடக்கழிவு மேலாண் மை திட்டப்பணிக்காக, 2.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர, வால்பாறையில், 41 துாய்மை பணியாளர்களுக்கு மாதம் தோறும் பொதுநிதியில் இருந்து, 11 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது.கிடப்புக்கு போனதுஇந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குப்பை தரம் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆறுகளில் துார்வாரப்பட்ட மண், திறந்தவெளி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.இதனால், கடந்த சில நாட்களாக சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுகாதார சீர்கேடுபொதுமக்கள் கூறியதாவது, 'வால்பாறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்காக பல முறை கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டும், இது வரை திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதோடு, நகரில் சுகாதாரமும் சீர்கெட்டுள்ளது. எனவே, வால்பாறை நகராட்சி சார்பில் விரைவில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்,' என்றனர்.அலட்சியம்வால்பாறை நகராட்சியில் தற்போது தான், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவது போன்றும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்றும் நகராட்சி கமிஷனர் அலட்சியமாக கூறுகிறார்.கடந்த, மூன்று ஆண்டுகளாக இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செலவு மட்டும் செய்யப்படுகிறது. ஆனால், வீடு வீடாக குப்பை சேகரிப்பு, குப்பை தரம் பிரிப்பு, மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பு, மக்காத குப்பையை விற்பனை செய்து துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என, எந்த பணியும் முறையாக நடப்பதில்லை.இப்பணிகளை கண்காணிக்க வேண்டிய நகராட்சி கமிஷனர், பெரும்பாலும் வெளியூரில் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறார். இதனால், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளும் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றனர்.வெள்ளை அறிக்கைமலைப்பகுதி மக்களின் சிரமம், பிரச்னைகளை அதிகாரிகள் உணராமல் உள்ளனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத நிலையில், திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவிடும் நிலையில், அதிகாரிகள் பொய்க்கணக்கு எழுதி பாக்கெட்டை நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், ஒப்பந்த முறையிலான துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையில் குளறுபடி செய்து, அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இணைந்து அரசு நிதியை 'அபேஸ்' செய்வதாகவும் புகார் கிளம்பியுள்ளது.இதனால், திடக்கழிவு மேலாண்மை திட்ட செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202020:34:19 IST Report Abuse
kulandhai Kannan இதில் முதல் குற்றவாளி, சுயநலத்தோடு குப்பைகளை வீசிச் செல்லும் பொது மக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X