பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் குடியிருப்பை இடிக்க டி.ஐ.ஜி., எஸ்.பி., கள ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பாழடைந்த போலீஸ் குடியிருப்பை போலீஸ் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆய்வு செய்தனர்.பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்களில் போலீசாருக்கு குடியிருப்பு கட்டப்பட்டது. 240 போலீசார் குடியிருப்புகள்; 12 எஸ்.ஐ.,க்கள், மூன்று இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன.போலீசார் குடியிருப்பு கட்டப்பட்டு, 37 ஆண்டுகளுக்கு மேலாகியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை; அச்சுறுத்தும் கட்டடத்தில் போலீஸ் குடும்பங்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கடந்த நான்கு ஆண்டுக்கு முன் குடியிருப்பை காலி செய்த போலீசார், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், கட்டடம் இடிக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை.பாழடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டும் பணி விரைந்து துவங்க வேண்டும், என, போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி., நரேந்திர நாயர் மற்றும் எஸ்.பி., அருளரசு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.போலீசார் கூறுகையில், 'கட்டடத்தை ஆய்வு செய்து, இடிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் பின், விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X