இணைப்பு ரோடு புதுப்பிப்பு பணி இழுபறி: பல கிராம மக்கள் அவதி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 இணைப்பு ரோடு புதுப்பிப்பு பணி இழுபறி: பல கிராம மக்கள் அவதி

உடுமலை:கிராம இணைப்பு ரோடு, புதுப்பிப்பு பணிகள் இழுபறியாக நடப்பதால், பல கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள, கண்ணமநாயக்கனுாரில், 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகருக்கு அருகிலுள்ள கிராமமாக உள்ளதால், வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. இக்கிராமத்திலிருந்து, எஸ்.வி.,புரம் வழியாக உடுமலை வரும் ரோடு, 2.5 கி.மீ., நீளம் உள்ளது. கடந்த, 15 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோடு, பராமரிக்கப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும், குண்டும், குழியுமாக மாறியிருந்தது.பல இடங்களில் ரோடு முற்றிலும் சேதமடைந்து, வெறும் ஜல்லிக்கற்கள் மட்டுமே இருந்தது. பிரதான போக்குவரத்து வழித்தடமாக உள்ள இந்த ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி, 10 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.நீண்ட இழுபறிக்கு பிறகு, ஒன்றிய நிர்வாகம் சார்பில் ரோட்டை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், அவ்வழித்தடத்தில், கண்ணநாயக்கனுார் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டுள்ளனர்; பல கி.மீ., தொலைவுக்கு சுற்றி, உடுமலை நகருக்கு வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் விளைபொருட்களை, உடுமலை சந்தைக்கு, கொண்டு வர முடியாமல், அவதிப்படுகின்றனர். உடுமலை ஒன்றிய நிர்வாகம் ரோடு புதுப்பிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X