சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் 'சில்லிங்' மது விற்பனை 'ஜோர்!'போலீசை கண்டித்து பெண்கள் போராட்டம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

உடுமலை:கிராமத்தில், 'சில்லிங்' மது விற்பனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கொண்டம்பட்டி ஊராட்சி மக்கள் போராட்டத்தில், ஈடுபட்டனர்.குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, வல்லக்குண்டாபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களில், முறைகேடாக, 24 மணி நேரமும், 'சில்லிங்' முறையில், மது விற்பனை நடக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன், குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, புகார் மனு அளித்தனர். தற்போது, மீண்டும் 'சில்லிங்' மது விற்பனை கிராமத்தில், ஜோராக துவங்கியுள்ளது. காலை நேரத்திலேயே குடித்து விட்டு, 'குடிமகன்'கள், அத்துமீறி, நடப்பதால், பல்வேறு பிரச்னைகள் கிராமத்தில், தொடர்ந்து ஏற்பட்டு வந்தது.இது குறித்து போலீசில், புகார் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆவேசமடைந்த கிராம பெண்கள், நேற்று காலை, வல்லக்குண்டாபுரத்திலுள்ள, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 'கிராமத்தில், 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறை போராட்டத்தில், ஈடுபட்ட போது, குடிமங்கலம் போலீசார் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால், மீண்டும், விதிமுறைகளை மீறி, மது விற்பனை செய்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்,' என பெண்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்த, குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு, வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'சில்லிங்' மது விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால், பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.முறைகேடாக மது விற்பனை வெளிப்படையாக நடப்பது குறித்து, போலீஸ் கண்டுகொள்ளாததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில், ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X