மேட்டுப்பாளையம்:கொரோனா தொற்று பாதித்த நபர், நகரில் பல இடங்களில் சுற்றியதையடுத்து, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம் போரே கவுடர் வீதியில், 20 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியானதைஅடுத்து, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர், இவரது வீட்டை சுற்றியும், தகர தடுப்பு வைத்து மறைத்தனர். ஒருவர் மட்டும் அனுமதியுடன் செல்லும் வகையில் இடைவெளி விடப்பட்டது.இந்நிலையில், இவர் உட்பட இளைஞரின் குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, அண்ணன், அண்ணி ஆகியோருக்கும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது, பிற்பாடு சோதனையில் தெரிய வந்துள்ளது.முன்னதாக, சுகாதாரத்துறையினர், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தையை அழைத்து, வீட்டிலுள்ள யாரும் வெளியே வரக்கூடாது என்றும், தேவையான பொருட்களை வெளி நபர்கள் வாயிலாக, வாங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.ஆனால் இளைஞரின், 52 வயதுடைய தந்தை, எல்.எஸ்.புரம், பாக்குகார வீதிகளில் உள்ள இரு ரேஷன் கடைகளுக்கு சென்று வந்துள்ளார்.அப்பகுதியில் உள்ள கடைகளுக்கும், சிலவீடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.இதனால் அப்பகுதி மக்கள், தங்களுக்கும் தொற்று பாதித்து இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டு மென, எல்.எஸ்.புரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.