கோர்ட் செய்தி

தமிழ்நாடு

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் :இருவர் ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:கேரளாவுக்கு 1.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற, இருவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பொள்ளாச்சியில், கடந்த 8ம் தேதி, வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் அரிசி மூட்டையுடன் சென்ற இருவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, கேரளாவுக்கு கடத்தியது தெரிந்தது.இது தொடர்பாக, முத்துராஜ்,57, ஆனந்தராஜ்,57, ஆகியோரை கைது செய்து, அவர்களது வீட்டில் சோதனையிட்டதில், கேரளாவுக்கு கடத்துவதற்காக, 56 மூட்டையில், ஒன்றரை டன் எடையுள்ள, அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கைதான இருவரும் ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி, இருவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X