கொரோனா கிளஸ்டர் ஆக மாறுகிறது முருகா நகர்: தடை மீறுவோரால் தொற்று அதிகரிக்கும் அபாயம்| Dinamalar

'கொரோனா கிளஸ்டர்' ஆக மாறுகிறது முருகா நகர்: தடை மீறுவோரால் தொற்று அதிகரிக்கும் அபாயம்

Added : ஜூலை 24, 2020 | |
போத்தனூர்:குறிச்சியில், தடை மீறி வெளியே சுற்றுவோரால், தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிச்சி மாணிக்க சேர்வை வீதியில், 10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து, அப்பகுதியினர் வெளியே செல்ல தடை ஏற்படுத்தப்பட்டது. சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அருகேயுள்ள ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த தாய், மகன் உள்பட

போத்தனூர்:குறிச்சியில், தடை மீறி வெளியே சுற்றுவோரால், தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிச்சி மாணிக்க சேர்வை வீதியில், 10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து, அப்பகுதியினர் வெளியே செல்ல தடை ஏற்படுத்தப்பட்டது. சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அருகேயுள்ள ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த தாய், மகன் உள்பட நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இச்சூழலில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், தி.மு.க., மன்றம் அருகேயுள்ள, சந்து வழியாக வெளியே வருகின்றனர். அதுபோல, தி.க.,மன்றம் அருகே கிணற்றையொட்டி உள்ள வழியாக வந்து, ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து, முருகா நகர் பகுதிக்கு வருகின்றனர்.இதனால் முருகா நகர் பகுதியில், தொற்று எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவும் குடிகாரர்கள் அங்கு வருகின்றனர்.முருகா நகரில், வீடுகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இங்கு தொற்று பரவினால், மிக எளிதாக இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி, சுந்தராபுரம் வரை பரவும். போலீசாரும், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும் உடனடியாக, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X