பொது செய்தி

தமிழ்நாடு

குறு, சிறு நிறுவனங்களுக்கு தனி அமைச்சகம்: அரசுக்கு 'போசியா' அமைப்பு கோரிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:'காட்டேஜ்', குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்காக மட்டுமே, தனி அமைச்சகம் உருவாக்க 'போசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு(போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியுள்ளதாவது:'சிறு குறு தொழில் முனையும் நிறுவனங்கள் வளர்ச்சிபெறவும், மேலும் வளம் பெறவும், போட்டி திறனை அதிகரிக்கவும், எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டத்தில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த சேவை நிறுவனங்கள் மட்டுமே, பதிவுபெற வகை செய்யுமாறு, திருத்தி அமைக்க வேண்டும்.குறு, சிறு நடுத்தர பிரிவுகள் மட்டுமின்றி, 'காட்டேஜ்' நிறுவனம் என்ற புதிய பிரிவையும், மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ரூ.25 லட்சத்திற்கும் குறைவாக இயந்திர முதலீடு மற்றும் ஒரு கோடிக்கும் குறைவான வியாபார தொகை உள்ள நிறுவனங்களை, இந்த பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.சிறு நிறுவனங்களுக்கு, இயந்திர முதலீட்டு அளவு தற்போதுள்ள, 5 கோடி ரூபாய் அளவே தொடர வேண்டும். வர்த்தக தொகை, ரூ.20 கோடியாக குறைக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில், 50 சதவீதம் காட்டேஜ் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கே ஒதுக்க வேண்டும். காட்டேஜ், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X