பொது செய்தி

தமிழ்நாடு

ஆச்சான் குளக்கரைகளை பலப்படுத்த தடுப்பு சுவர்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 ஆச்சான் குளக்கரைகளை  பலப்படுத்த தடுப்பு சுவர்

சூலூர்:நீலம்பூர் ஆச்சான் குளக்கரைகளை பலப்படுத்த, தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.சூலூர் அடுத்த நீலம்பூரில், 400 ஏக்கர் பரப்புள்ள ஆச்சான்குளம் உள்ளது. இருகூர் அருகே உள்ள ராஜ வாய்க்கால் வழியே, நொய்யல் ஆற்று நீர் இக்குளத்துக்கு வரும்.பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, ஷட்டர்களை பழுதுநீக்க, சுற்று வட்டார விவசாயிகள் கோரி வந்தனர்.இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டது. கரைகளை பலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி நடக்கிறது. கிழக்குப்புறம் உள்ள கரையை ஒட்டி, சுவர் கட்டப்பட்டது.தற்போது, 400 மீ., தூரத்துக்கு வடக்குகரையில், தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதேபோல், கடைமடை பகுதியிலும் பக்கவாட்டிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X