விஜய் மல்லையா வருவது எப்போது? பிரிட்டன் அதிகாரி விளக்கம்!| Cannot set timeline for Vijay Mallya's extradition to India: UK envoy | Dinamalar

விஜய் மல்லையா வருவது எப்போது? பிரிட்டன் அதிகாரி விளக்கம்!

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (10)
Share
Vijay Mallya, Vijay Mallya case, United Kingdom, fugitive businessman Mallya, விஜய் மல்லையா வருவது எப்போது? பிரிட்டன் அதிகாரி விளக்கம்!

புதுடில்லி :'விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது' என, பிரிட்டன் துாதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.'கிங் பிஷர்' விமான போக்குவரத்து நிறுவனம், மதுபான நிறுவனங்களை நடத்தி வந்த விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திரும்ப செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.

அவருக்கு எதிராக, அமலாக்க துறை, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றன. மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரக அதிகாரி பிலிப் பர்டோன், இது குறித்து கூறியதாவது:மல்லையா விவகாரத்தில், பிரிட்டனில், சில சட்டச் சிக்கல்கள் நிலுவையில் உள்ளன. அவை முடிந்தால் மட்டுமே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர முடியும்.


latest tamil news
எனவே, மல்லையா இந்தியாவுக்கு எப்போது அழைத்து வரப்படுவார் என, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. மல்லையாவுக்கு, பிரிட்டன் அரசு சார்பில் அரசியல் அடைக்கலம் தரப்படுமா என்பது குறித்து, எதுவும் தெரிவிக்க முடியாது. தனி நபரின் அரசியல் அடைக்கலம் குறித்து, நான் எதுவும் தெரிவிக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X