பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி அதிகரிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பேரூர்:விளைநிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்கள், சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. அதன் வாயிலாக நிலத்துக்கு, தழைச்சத்துக்கள் பெறப்படுகின்றன.தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் விவசாயம், பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, வாழை, சின்ன வெங்காயம், மக்காச்சோளம், கரும்பு மற்றும் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.விளைநிலங்களில் தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்துவதாலும், வறட்சியாலும் நிலத்தில் உள்ள, உயிர் சத்துக்கள் அழிகின்றன.இதனால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க, வேளாண் துறை சார்பில், மண்ணிலுள்ள சத்துக்களை மீட்டெடுக்கவும், நுண்ணுயிர்களை உயிர் பெற செய்யவும், பசுந்தாள் உரப்பயிர்களை, சாகுபடி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, நிலம் மற்றும் தென்னையில் சணப்பு, கொள்ளு, கொழிஞ்சி சாகுபடி செய்து, நிலத்தோடு சேர்த்து மடக்கி உழப்படுகிறது. தற்போது ஆலாந்துறை, செம்மேடு உள்ளிட்ட பகுதிகளில், தக்கப்பூடு பசுந்தாள் பயிரும் விதைக்கப்பட்டுள்ளது. இதை மடக்கி உழுவது எளிது என்பதால், ஆர்வம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X