பொது செய்தி

தமிழ்நாடு

'சீல்' வைக்கப்பட்ட காலனியில் மூன்று அமைப்பினர் 'தாராளம்'

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அன்னூர்:சீல் வைக்கப்பட்ட முதலிபாளையம் காலனியில், பல்வேறு அமைப்பினர் உதவி வழங்கினர்.காட்டம்பட்டி ஊராட்சி, முதலிபாளையம், காலனியில், தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர் உள்பட 19 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றனர். 16 பேர் குணமாகி வீடு திரும்பினார்.தொற்று காரணமாக, காலனியில் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டன. வெளியே வர தடை விதிக்கப்பட்டது. வருமானம் இன்றி தவித்தவர்களுக்கு, நேற்று மாவட்ட கவுன்சிலர் அபிநயா, ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, அ.தி.மு.க., நிர்வாகி அர்ஜுனன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில், 110 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறி பொருட்கள் வழங்கப்பட்டன.தி.மு.க., சார்பில், 110 குடும்பங்களுக்கு, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பிரமணியம் ஆகியோர் ரொட்டி மற்றும் பால் வழங்கினர்.ஊராட்சி முன்னாள் தலைவர் காந்திமதி ஜம்பு மற்றும் நண்பர்கள் சார்பில், 110 குடும்பங்களுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. காலனி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X