நகை மோசடி பெண் போலீஸ் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நகை மோசடி பெண் போலீஸ் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்

Added : ஜூலை 24, 2020
Share

கோவை:நகை மோசடி செய்ததால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் போலீஸ், வழக்கை ரத்து செய்ய கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ஸ்வப்ன சுஜா,33; திருட்டு வழக்குகளில், கைப்பற்றப்பட்ட, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 61 சவரன் நகைகளை, கோர்ட்டில் ஒப்படைக்காமல் மோசடி செய்தார். குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், ஸ்வப்ன சுஜா சார்பில் தாக்கல் செய்த மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.விசாரித்த ஐகோர்ட், சுஜாவின் மனுவை தள்ளுபடி செய்தது. வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X