முதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பீடு எப்படி?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பீடு எப்படி?

Added : ஜூலை 24, 2020
Share

கோவை:முதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களை, எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது குறித்து, கல்லுாரி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்., இறுதிக்குள் கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோன்று முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்தாண்டு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தங்களது அடுத்த பருவ செமஸ்டர் தேர்வை தான் எழுத வேண்டும்.இதற்கிடையே, கடந்தாண்டு கல்லுாரிகளில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் வரை பொறுத்திருந்து, இடம் கிடைத்த மாணவர்கள் பலர், முதல் செமஸ்டர் தேர்வை எழுதாமல் உள்ளனர்.இவர்களுக்கு இரண்டாவது செமஸ்டர் தேர்வின்போது, முதல் செமஸ்டர் தேர்வை சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது அந்த செமஸ்டர் தேர்வுக்கும், விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், குறிப்பிட்ட அந்த மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுதாமலேயே, இரண்டாம் ஆண்டுக்கு செல்ல உள்ளனர்.இதுபோன்று, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் போன்ற காரணங்களால், முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களை, எவ்வாறு மதிப்பீடு செய்வது, இவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் செமஸ்டர் தேர்வுகளை சேர்த்து எழுத வைக்கலாமா என்பன, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, கல்லுாரி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X