பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரசை தடுக்க...

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பெ.நா.பாளைய

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மூன்று அடுக்குகள் கொண்ட முக கவசங்களை பயன்படுத்துவதே பாதுகாப்பாக இருக்கும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காட்டன் துணியால் தயாரித்த மாஸ்க்கை அணிந்தாலே போதுமானது என, பலரும், ஜூலை 24--ம் கவனக் குறைவாக இருக்கிறார்கள்.மேலும் பலர், அதிக பாதுகாப்பு தரும் என்ற எண்ணத்தில், மருத்துவ பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட, 'என்95 மாஸ்க்' பயன்படுத்துகின்றனர். அதிலும், சிலர் விலை உயர்ந்த வால்வுகள் பொருத்தப்பட்ட மாஸ்க்கை அணிகின்றனர்.இந்த முக கவசம், ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது. இதனால் நோய் பரவுவதை தடுக்க, எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீங்காக முடியும். எனவே, என்95 மாஸ்க்குகளை பயன்படுத்தக்கூடாது என, மத்திய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சரி...கொரோனா பரவலை தடுக்க, எந்த மாஸ்க்கைதான் பயன்படுத்துவது நல்லது?இது குறித்து, கோவை மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் பால வெங்கட் கூறியதாவது:இன்று பெரும்பாலானோர், துணி மாஸ்க்கை மட்டுமே பயன்படுத்துகின்றனர். துணி மாஸ்க் அணிந்த ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரிடமிருந்து பிறருக்கு பரவாது. பிறரிடம் இருந்து அவருக்கு, தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.'த்ரீ பிளை மாஸ்க்' என்றால் என்ன?மூன்று அடுக்கு கொண்ட மாஸ்க் (Three ply mask) அணிவதே பாதுகாப்பானது. மூன்று அடுக்கு மாஸ்க் என்றால், மாஸ்க்கின் வெளிப்புறம் படிகள் போன்ற மூன்று மடிப்புகள் அல்ல; மாஸ்க்கின் மூன்று தடுப்புகளை குறிப்பிடுவதுதான், மூன்று அடுக்கு மாஸ்க். துணி மாஸ்க்கில் காணப்படும் மடிப்புகளால் பயனில்லை.டாக்டர்கள் பயன்படுத்தும், பச்சை, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தினால் ஆன, மாஸ்க் மூன்று அடுக்கு கொண்டதுதான். இந்த மாஸ்க்கின் மூன்று அடுக்குகளில் உள்புறம் ஒரு பில்டர், நடுவில் ஒரு பில்டர், வெளிப்புறம் ஒரு தடுப்பான் இருக்கும்.தொற்று தாக்கிய ஒருவர் இருமும் போதோ, அல்லது தும்மும் போதோ, திரவ வடிவிலான வைரஸ் கிருமி வாயிலாக பரவுகிறது.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தணும்மூன்றடுக்கு மாஸ்க் அணிவதால், வெளியில் இருக்கும் வைரஸ் கிருமிகள், மூன்று அடுக்கின் வெளிப்புறத்தில் உள்ள தடுப்பானில் பட்டாலும், அவை நம் உடலுக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.ஏனென்றால், தடுப்புக்கு அடுத்ததாக ஒரு பில்டர் உள்ளது. அதற்கு அடுத்ததாக, நம் வாயருகே ஒரு பில்டர் உள்ளது. இது, நம் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீர், உள்ளிட்டவற்றை உள்வாங்கிக்கொள்ளும்.இதனால் நம்மிடமிருந்து பிறருக்கும், பிறரிடமிருந்து நமக்கும் வைரஸ் தொற்று பரவாது. இந்த மூன்றடுக்கு மாஸ்க்கை, ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய மாஸ்க்கை வீட்டினுள் கொண்டு வரக்கூடாது.மூன்றடுக்கு மாஸ்க்கை, மெடிக்கல் ஷாப்களில் வாங்கும்போது, எது வெளிப்புறம் எது உள்புறம் என, தெளிவாக கேட்டறிந்து, அணிவது மிக அவசியம்.இவ்வாறு, டாக்டர் பாலவெங்கட் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X