பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த மாதம் கேரளாவில் ஓணம் கொண்டாட்ட அறிகுறி காணோம்!

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 அடுத்த மாதம் கேரளாவில் ஓணம் கொண்டாட்ட அறிகுறி காணோம்!

பேரூர்:கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஓணத்தை எதிர்நோக்கி வாடாமல்லி சாகுபடி செய்த விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர்.கேரள மக்கள் ஓணம் திருவிழாவின் போது, அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். அக்கோலத்தில் வாடாமல்லி பூ அதிகளவில் பயன்படுத்தப்படும். அதை முன்னிட்டு, கோவையில் உள்ள கிராமங்களில், வாடாமல்லி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படும்.நடப்பாண்டு விழாவை எதிர்நோக்கி மோளப்பாளையம், நாதேகவுண்டன் புதுார், வடிவேலாம்பாளையம், முகாசி மங்கலம், காளிமங்கலம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பல நுாறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓணம் திருவிழா, அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது, சாகுபடி நிலங்களில் பூக்கள் பூத்து தயாராக உள்ளன. அதே நேரம், இப்பூக்களை பயன்படுத்தும் கேரளாவிலோ, கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில், 1,038 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் வாய்ப்பும் உருவாகி வருகிறது. அதனால், ஓணத்தை எதிர்நோக்கி வாடாமல்லி சாகுபடி செய்த விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு, ஓணத்தின் போது வாடாமல்லி கிலோ, ரூ.150 வரை விலை போனது; நல்ல லாபம் கிடைத்தது. தற்போது, திருவிழா நெருங்கியுள்ள சமயத்தில், கொரோனா அதிகரிப்பது கவலை அளிக்கிறது. 2018ல் ஓணத்தின் போது, பெய்த வரலாறு காணாத மழையால் திருவிழா ரத்தானது. வாடாமல்லி பயிரிட்டோர் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர். தற்போதும், அதே நிலை உருவாகி விடுமோ என, அச்சமாக உள்ளது.-தங்கவேல்விவசாயி, வடிவேலாம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X