மாற்றுத்திறனாளிகளே உதவி பெற வாருங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளே உதவி பெற வாருங்கள்!

Added : ஜூலை 24, 2020
Share
அன்னூர்:கொரோனா நிவாரண தொகை பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.அன்னுாரில் நடந்த நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் பேசுகையில், "கோவை மாவட்டத்தில், 48 ஆயிரத்து 474 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழக அரசு, கொரோனா நிவாரணமாக தலா 1,000 ரூபாய் வழங்குகிறது. இதுவரை, 20,000 பேர் மட்டும் பெற்றுள்ளனர்.

அன்னூர்:கொரோனா நிவாரண தொகை பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.அன்னுாரில் நடந்த நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் பேசுகையில், "கோவை மாவட்டத்தில், 48 ஆயிரத்து 474 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழக அரசு, கொரோனா நிவாரணமாக தலா 1,000 ரூபாய் வழங்குகிறது. இதுவரை, 20,000 பேர் மட்டும் பெற்றுள்ளனர். பெறாதவர்கள் அடையாள அட்டையுடன், தங்கள் பகுதி வி.ஏ.ஓ.,வை அணுகலாம். மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேருக்கு வழங்கப்பட உள்ளது," என்றார்.நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் செல்வி வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X