வனக்காவலருக்கு போலீஸ் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனக்காவலருக்கு போலீஸ் பாராட்டு

Added : ஜூலை 24, 2020
Share

தொண்டாமுத்துார்:உலியம்பாளையத்தில் சாலையோரத்தில் சிதறிக்கிடந்த, 17,500 ரூபாய் நோட்டுகளை, போலீசில் ஒப்படைத்த வனக்காவலரை, போலீசார் பாராட்டினர்.கோவை வனச்சரகம், கெம்பனுார் சுற்றுப்பகுதியில், வனக்காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ். இவர், நேற்று பகல், 12:45 மணியளவில், தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, சாலையில், 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்துள்ளன. அதனை எடுத்து தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். 17,500 ரூபாயை பத்திரமாக, ஒப்படைத்த வனக்காவலரை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X