பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு மருந்து

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கொரோனாவுக்கு எதிராக  ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு மருந்து

''கொரோனா பாதிப்பில் இருந்து காக்க, ஆயுர்வேதத்தில் அரசு அங்கீகரித்த சிறந்த மருந்துகள் உள்ளன,'' என்கிறார், ஆயுர்வேத மருத்துவர் நிகிலா வெங்கட். கொரோனாவை தடுக்க ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறதா?ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும், பல நல்ல மருந்துகள் உள்ளன. அதை மத்திய அரசு அங்கீகரித்து, வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக வயாக்ராதி கஷாயம், தசமூல கடுத்ரய கஷாயம் மற்றும் அகஸ்த்திய ரசாயனம் உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. தொண்டையை தாக்கும் நோய் கிருமிகளை அழிக்க அதிமதுரம், அஸ்வகந்தா, தாளிஸ்சாதி சூரணம் ஆகியவை, சிறந்த நோய் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.பருவநிலை மாறுதலால், சளி வந்தாலே குழப்பமாக இருக்கிறதே...?காய்ச்சல் இல்லாமல் இருமல், சளி மட்டும் இருந்தால், அதிமதுர சூரணம் சாப்பிடலாம். வயாக்ராதி கசாயம், அஸ்வகந்தா மற்றும் அகஸ்த்திய கசாயம் குடிக்கலாம். எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனையுடன், சாப்பிடுவதுதான் நல்லது. பெண்கள் மாதவிலக்கு காலத்தில் சந்திக்கும், பிரச்னைகளுக்கு ஆயுர்வேதத்தில் என்ன தீர்வு சொல்லப்படுகிறது?பெண்கள் பொதுவாக, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, ஒரு முக்கிய காரணம். இன்றைய பாஸ்ட்புட் முறையும் காரணம். இந்த உணவு, ஜீரண உறுப்புகளை பாதிப்பதால், கழிவுகள் முறையாக வெளியேறுவதில்லை. பனங்கருப்பட்டி, வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இந்த கொரோனா காலத்தில் உணவு முறையில், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?மஞ்சள், மிளகு கலந்த பால் குடிக்கலாம். புரோட்டீன் அதிகம் உள்ள சுண்டல், பாசிப்பயிறு உள்ளிட்ட பருப்பு வகைகள் சாப்பிடலாம். இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ரசத்தை, ரெகுலராக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.துாதுவளை, கற்பூரவல்லி இலை ரசம் சாப்பிடலாம். இவை சுவாச பிரச்னைகளை தவிர்க்கும். எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. பெரிய நெல்லி சாப்பிடலாம். ஜீரண சக்தி சரியாக இருந்தால் நோய் நெருங்காது. நேரம் தவறாமல் சாப்பிடுவது, மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது நல்லது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202016:37:43 IST Report Abuse
ஆப்பு ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ அப்போது அறியப் பட்ட வியாதிகளுக்கே மருந்தளிக்கும். கொரோனா, எய்ட்ஸ், ஸ்பானிஷ் ஃப்ளூ, போலியோ போன்ற நோய்களுக்கு மருந்தில்லை. அக்காலத்தில் இல்லாத வியாதிக்கு எப்படி ஓலைசுவடியில் தீர்வு இருக்க முடியும்? நோய் எதிர்ப்புன்னு பொதுவா சொல்லி மருந்து குடுத்து கொரோனா மருந்துன்னு சொல்லிடக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X